September 27, 2026
தேசியம்
செய்திகள்

Halifax உயர்நிலைப் பாடசாலையில் மூவர் மீது கத்தி குத்து

Nova Scotia மாகாணத்தின் Halifax பகுதியில் உள்ள உயர்நிலைப் பாடசாலையில் மூவர் கத்தி குத்து காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

Charles P. Allen உயர்நிலைப் பாடசாலையில் திங்கட்கிழமை (20) காலை இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இந்த சம்பவம் குறித்த குற்றச் சாட்டில் ஒரு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக Halifax காவல்துறை கூறுகிறது.

காயமடைந்தவர்களில் இரண்டு பாடசாலை ஊழியர்களும் கைது செய்யப்பட்ட மாணவனும் அடங்குகின்றனர்.

காயமடைந்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறையினரின் விசாரணைகள் தொடரும் நிலையில் திங்கள் முழுவதும் பாடசாலை மூடப்படும் என Halifax பிராந்திய கல்வி மையம் தெரிவித்தது.

 

Related posts

அத்தியாவசியமற்ற பயணம் குறித்த ஆலோசனையை மீறிய Liberal நாடாளுமன்ற உறுப்பினர்

Lankathas Pathmanathan

கனடிய அரசுக்கும் – பொதுச் சேவை சங்கத்துக்கும் இடையில் தொடரும் பேச்சுவார்த்தை

Lankathas Pathmanathan

Toronto Raptors அணி playoffs தொடருக்கு தெரிவு

Lankathas Pathmanathan

Leave a Comment