தேசியம்
செய்திகள்

பாதசாரிகளை வாகனத்தால் மோதியது பயங்கரவாத செயல் அல்ல

Quebec மாகாணத்தில் பல பாதசாரிகளை வாகனத்தால் மோதிய குற்றச்சாட்டுகள் வாகன சாரதி மீது சுமத்தப்பட்டுள்ளது.

Montreal வடகிழக்கில் Lower St. Lawrence பகுதியில் திங்கட்கிழமை (13) நிகழ்ந்த இந்த சம்பவத்தில் இருவர் பலியானதுடன், ஒன்பது பேர் காயமடைந்தனர்.

இதில் வாகன சாரதி மீது ஆபத்தான வாகனம் ஓட்டி மரணம் ஏற்படுத்தியதாக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

38 வயதான வாகன சாரதி Steeve Gagnon செவ்வாய்கிழமை (14) பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜராகி, இந்த சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டை முறையாக எதிர்கொண்டார்.

இது வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட செயல் என காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனாலும் இது ஒரு பயங்கரவாத செயல் அல்ல என Quebec காவல்துறையினர் நம்புகின்றனர்.

இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் எனவும் ஒருவரின் தனிப்பட்ட செயல் எனவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

இந்த சம்பவம் குறித்த காவல்துறையினரின் விசாரணை முழுமை அடையவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதில் பலியான இருவரும் அடையாளம் காணப்பட்டனர்.

காயமடைந்தவர்களில் ஒன்பது மாத குழந்தையும், மூன்று வயது குழந்தையும் அடங்குகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அனைத்து Quebec மக்களும் அதிர்ச்சியடைந்துள்ளதாக மாகாண முதல்வர் François Legault தெரிவித்தார்.

Related posts

Regina Beach விமான நிலையம் அருகே அவசரமாக தரையிறங்கிய ஒன்றை இயந்திர விமானம்

Lankathas Pathmanathan

2020ல் கனேடியர்களின் வருமானம் அதிகரித்துள்ளது

Lankathas Pathmanathan

நடைமுறைக்கு வந்த சீன விமானப் பயணிகளுக்கான விதிமுறை

Lankathas Pathmanathan

Leave a Comment