December 12, 2024
தேசியம்
செய்திகள்

இலங்கையில் கனடிய தமிழர் மீது வாள்வெட்டு

கனடிய தமிழர் ஒருவர் இலங்கையில் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

யாழ்ப்பாணம் – அனலைதீவில் வெள்ளிக்கிழமை (24)  அதிகாலைப் பொழுதில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதில் கனடிய தமிழரான நாகலிங்கம் சுப்பிரமணியம் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் தங்கியிருந்த இல்லத்திற்குள் நுழைந்த நால்வர் அடங்கிய குழு பெருந்தொகைப் பணத்தை கொள்ளையிடதுடன் அவர் மீது வாள்வெட்டு தாக்குதலையும் மேற்கொண்டுள்ளது.

கனடாவில், இருந்து இரண்டு மாதங்களிற்கு முன்னர் இவர் அனலைதீவு சென்று  வீடு புனரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இவர் தங்கியிருந்த வீட்டிற்குள் 12 மணியளவில் உட்புகுந்த 4 பேர் அடங்கிய குழு அவர் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டதுடன் பணம், கடவுச்சீட்டு உட்பட பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

நாகலிங்கம் சுப்பிரமணியம், கனடா ஐயப்பன் இந்து ஆலயத்தின் பிரதான குருசுவாமியாக பல ஆண்டுகள் சேவையாற்றி வருபவராவார்.

இம்முறையும் கனடாவில் இருந்து ஐயப்பன் பக்தர்களுடன் சபரிமலைக்குச் சென்ற இவர் அங்கு தனது விரதத்தை முடித்துக் கொண்டு தனது துணைவியாருடன் சொந்த ஊரான அனலைதீவிற்கு சென்றிருந்ததாக தெரியவருகிறது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த நாகலிங்கம் சுப்பிரமணியம் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

Related posts

உரிமை கோரப்படாத $70 M அதிஸ்டலாப சீட்டு விரைவில் காலாவதி !

Lankathas Pathmanathan

Quebec மாகாணத்தில் மின்சாரத்தை இழந்த 100,000 வாடிக்கையாளர்கள்

Lankathas Pathmanathan

வீட்டு உரிமையாளர்கள் வெப்ப விசையியக்கக் குழாய்களுக்கு மாறுவதற்கு அரசாங்கம் $250 மில்லியன் மானியம்

Lankathas Pathmanathan

Leave a Comment