தேசியம்
செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் தீவிரமான அச்சுறுத்தல்கள்

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் தீவிரமான அச்சுறுத்தல்களை பாதுகாப்பு குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன.

Gab எனப்படும் தீவிர வலதுசாரி சமூக வலை பின்னனில் வெளியிடப்பட்ட அச்சுறுத்தலில் கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரது பெயர்களும் உள்ளடங்கியிருந்தன.

கனேடிய அரசாங்கம் உலகப் பொருளாதார மன்றத்தின் விருப்பத்திற்கு செயல்படுவதாக இந்த அச்சுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெயரிடப்பட்ட அரசியல்வாதிகள் தேசத் துரோகத்திற்காக தூக்கிலிடப்பட வேண்டும் என இந்த அச்சுறுத்தல் அழைப்பு விடுத்தது.

பிரதமர் Justin Trudeau, துணை பிரதமர் Chrystia Freeland, எதிர்கட்சி தலைவர் Pierre Poilievre, வெளியுறவு அமைச்சர் Mélanie Joly, பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino, பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் உட்பட 28 அமைச்சர்கள் இந்த அச்சுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Related posts

Justin Trudeau பதவி விலக வேண்டிய நேரம் இது: முன்னாள் Liberal அமைச்சர்

Lankathas Pathmanathan

281 கனடியர்கள் இஸ்ரேலில் இருந்து வெளியேற்றம்!

Lankathas Pathmanathan

101ஆவது வயதி காலமான Mississauga முன்னாள் நகர முதல்வர் McCallion

Lankathas Pathmanathan

Leave a Comment