தேசியம்
செய்திகள்

COVID காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனடியர்கள் மரணம்

COVID தொற்றின் காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனடியர்கள் மரணமடைந்தனர்.

COVID தொற்றின் ஆரம்பத்தில் இருந்து இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் திங்கட்கிழமை (23) உறுதிப்படுத்தியது.

கடந்த செவ்வாய்கிழமை (17) COVID காரணமான கனடாவின் மரண எண்ணிக்கை முதன் முதலில் 50 ஆயிரத்தை தாண்டியதாக சுகாதார தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.

திங்கள் மாலையுடன் இறப்புகளின் எண்ணிக்கை 50,135ஐ எட்டியுள்ளதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் கூறுகிறது.

மாகாண ரீதியில் அதிகூடிய இறப்புகள் Quebec மாகாணத்தில் பதிவாகியுள்ளன.

Quebec, மாகாணத்தில் திங்கள் வரை 17,865 மரணங்கள் பதிவாகியுள்ளதாக மாகாண தரவுகள் தெரிவிக்கின்றன

மரணங்களின் எண்ணிக்கையில் Ontario இரண்டாவது இடத்திலும் Albertaவில் மூன்றாவது இடத்திலும் உள்ளன

வெள்ளிக்கிழமை (20) தரவுகளின் படி Ontario மாகாணத்தில் 15,786 மரணங்கள் பதிவாகின.

Albertaவில் கடந்த புதன்கிழமை (18) வரையிலான தரவுகளின் அடிப்படையில் 5,470 மரணங்கள் பதிவாகியுள்ளன.

British Columbiaவில் வியாழக்கிழமை (19) பதிவான தரவுகளின் அடிப்படையில் 5,007, Saskatchewanனில் 1,826, Manitobaவில் வெள்ளிக்கிழமை (20) வெளியான தரவுகளின் அடிப்படையில் 2,403 என மரணங்கள் பதிவாகின.

Atlantic கனடாவில் New Brunswick, Prince Edward Island மாகாணங்களில் செவ்வாய்க்கிழமை (17) வரை முறையே 762, 85 மரணங்களும், Newfoundland and Labradorரில் புதன்கிழமை (18) வரையிலான தரவுகளில் 297 மரணங்களும், Nova Scotiaவில் வியாழக்கிழமை (19) வரை 706 மரணங்களும் முறையிடப்பட்டுள்ளன.

Yukon, Northwest Territories, Nunavut ஆகிய பிரதேசங்கள் கடந்த ஆண்டுடன் தங்கள் மரணங்களின் எண்ணிக்கையை பதிவு செய்வதை நிறுத்தியுள்ளன.

இந்த மூன்று பிரதேசங்களும் 2020 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து மொத்தம் 21 இறப்புகளை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றில் பாதிக்கும் அதிகமானவை Yukon பிராந்தியத்தில் பதிவாகியுள்ளன.

ஆனாலும், உத்தியோகபூர்வமாக பதிவான மரணங்களின் எண்ணிக்கையை விட உண்மையான இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என பொது சுகாதார நிபுணர்கள் நீண்ட காலமாக கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

முழுமையான முடக்கம்? இன்று (வியாழன்) முதல்வர் Ford அறிவிப்பார்!

Lankathas Pathmanathan

B.C. உலங்குவானுர்தி விபத்தில் இருவர் பலி – நால்வர் காயம்

Lankathas Pathmanathan

பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் Toronto காவல்துறை அதிகாரி கைது

Leave a Comment