December 12, 2024
தேசியம்
Uncategorizedசெய்திகள்

சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடியர்களை நாடு திரும்ப உதவுமாறு மத்திய அரசாங்கத்திற்கு நீதிபதி உத்தரவு

சிரிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 4 கனேடியர்களை மீண்டும் கனடாவுக்கு அழைத்து வர உதவுமாறு மத்திய அரசாங்கத்திற்கு மத்திய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கூடிய விரைவில் இவர்களை கனடாவுக்கு அழைத்து வர வெள்ளிக்கிழமை (20) தனது தீர்ப்பில் நீதிபதி கனடிய அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

இவர்களுக்கு கடவுச்சீட்டுகள் அல்லது அவசர பயண ஆவணங்களை வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சிறைபிடித்தவர்கள் அவர்களை மீள ஒப்படைக்க ஒப்புக்கொண்டவுடன், அவர்கள மீண்டும் கனடாவுக்கு அழைத்து வர உதவ, மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதி சிரியா செல்ல வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

ஏற்கனவே சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 பெண்கள், குழந்தைகளை மீண்டும் கனடாவுக்கு அழைத்து வருவதற்கு வியாழக்கிழமை கனேடிய அரசாங்கம் ஒப்புக் கொண்டிருந்தது.

இவர்களில் ஆறு பெண்களும், 13 குழந்தைகளும் அடங்குகின்றனர்.

தொடர்புபட்ட செய்தி:

சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 பேர் மீண்டும் கனடாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்

Related posts

காட்டுத்தீ நிலைமை தீவிரமானது: பிரதமர் Justin Trudeau

Lankathas Pathmanathan

தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம் போன்ற தொனியிலான பிரதமரின் உரையுடன் முடிவடைந்தது Liberal கட்சியில் மூன்று நாள் தேசிய மாநாடு

Gaya Raja

November மாதத்தில் மாத்திரம் கனடாவில் 140,000 தொற்றுக்கள் பதிவு!

Lankathas Pathmanathan

Leave a Comment