சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 பேர் மீண்டும் கனடாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்

சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 பெண்கள், குழந்தைகளை மீண்டும் கனடாவுக்கு அழைத்து வருவதற்கு கனேடிய அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. இவர்களில் ஆறு பெண்களும், 13 குழந்தைகளும் அடங்குகின்றனர். இவர்கள் அனைவரும் தற்போது வடகிழக்கு சிரியாவில் உள்ள சிறை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் 2019 இல் இஸ்லாமிய அரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் குர்திஷ் அதிகாரிகளால் இயக்கப்படும் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை மீண்டும் கனடாவுக்கு அழைத்து வருவதற்கு கனேடிய அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளதாக அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் தெரிவித்தார். ‘ இதற்கான ஒப்பந்தத்தை வெளிவிவகார அமைச்சிடமிருந்து வியாழக்கிழமை (19) காலை பெற்றதாக அவர் கூறினார். இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது அவர்களின் அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதாகும் என அவர்களின் நீதிபதி வாதாடினார். திருப்பி அனுப்பும் இந்த ஒப்பந்தத்தில், விண்ணப்பதாரர்களாக இருக்கும் நான்கு ஆண்கள் உள்ளடக்கப்படவில்லை என அவர் கூறினார். இவர்கள் மீண்டும் கனடா திரும்புவதை உறுதி செய்ய அரசாங்கத்திற்கு உத்தரவிடுமாறு அவர்களின் குடும்பத்தினர் நீதிமன்றத்தை நாடினர். இந்த 19 பெண்கள், குழந்தைகள் தவிர, சிரியாவில் உள்ள முகாம்களிலும் சிறைகளிலும் இருபதுக்கும் அதிகமான கனேடியர்கள் இருக்கலாம் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. Download WordPress Themes FreeDownload Best WordPress Themes Free DownloadDownload Best WordPress Themes Free DownloadFree Download WordPress Themesfree online coursedownload samsung firmwareFree Download WordPress ThemesZG93bmxvYWQgbHluZGEgY291cnNlIGZyZWU=