தேசியம்
செய்திகள்

Quebec வெடிப்பு சம்பவ இடத்தில் மூன்று உடல்கள் மீட்பு

Quebec propane நிறுவன வெடிப்பு சம்பவ இடத்தில் இருந்து மூன்று உடல்களை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

கடந்த வியாழக்கிழமை (12) Montreal நகருக்கு அருகில் உள்ள எரிபொருள் விநியோக நிறுவனத்தில் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

இதில் மூவர் காணாமல் போயுள்ளதாக மாகாண காவல்துறையினர் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் வெடிப்பு சம்பவ இடத்தில் இருந்து மூன்று பேரின் உடல்களை கண்டெடுத்துள்ளதாக Quebec மாகாண காவல்துறையினர் திங்கட்கிழமை (17) அறிவித்தனர்.

இந்த உடல்கள் அடையாளம் காணப்படுவதற்கு தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது ஒரு குற்றச் செயல் என நம்பவில்லை என காவல்துறையினர் கூறியுள்ள போதிலும் விசாரணைகள் தொடர்கின்றன.

இந்த விசாரணை நீண்டதாகவும் சிக்கலானதாகவும் இருக்கலாம் என காவல்துறையினர் இன்று தெரிவித்தனர்.

Related posts

Stephen Lecce தேர்தலில் இருந்து விலக வேண்டும்: NDP வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற கனடா

Lankathas Pathmanathan

Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் மேலும் பல புதிய வேட்பாளர்கள்

Leave a Comment