தேசியம்
செய்திகள்

தற்காலிகமாக கனடாவுக்கு புலம் பெயர்ந்த உக்ரேனியர்கள் நிரந்தரமாக கனடாவில் தங்க முயற்சி

உக்ரேனிய யுத்தம் காரணமாக தற்காலிகமாக கனடாவுக்கு புலம் பெயர்ந்தவர்களில் சில நிரந்தரமாக கனடாவில் தங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

உக்ரைனில் யுத்தம் ஆரம்பித்த காலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான உக்ரேனியர்கள் கனடாவுக்கு புலம் பெயர்ந்துள்ளனர்.

CUAET எனப்படும் கனடா-உக்ரைன் அனுமதியின் மூலம் இந்த அவசர கால பயணத்தை அவர்கள் மேற்கொண்டனர்.

இந்த திட்டம் உக்ரைனியர்கள் கனடாவில் தற்காலிக அடிப்படையில் மூன்று ஆண்டுகள் வரை மட்டுமே தங்க அனுமதிக்கிறது.

அவர்களில் பலர் உக்ரேனிய யுத்தம் தொடரும் நிலையில் நிரந்தரமாக கனடாவில் தங்குவதற்கான வழிகளைத் தேடுகின்றனர்.

CUAET திட்டத்தின் கீழ் December மாதம் வரை 755,784 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 474,473 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இதுவரை 137,797 உக்ரேனியர்கள் கனடா வந்தடைந்துள்ளனர்.

Related posts

கனடாவை வந்தடைவதற்கு ஆபத்தான பயணங்களை முன்னெடுக்க வேண்டாம்: ஹரி ஆனந்தசங்கரி வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

Alberta மாகாணம் கனடா ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து வெளியேறுவது மாற்ற முடியாத தவறு?

Lankathas Pathmanathan

ஆயிரக்கணக்கான கனேடியர்களுக்கு மின்சாரம் இல்லாத நிலை தொடர்கிறது

Lankathas Pathmanathan

Leave a Comment