தேசியம்
செய்திகள்

காணாமல் போன சீன மனித உரிமை பாதுகாவலரை கனடா திரும்ப அனுமதிக்குமாறு கோரிக்கை

காணாமல் போன சீன மனித உரிமை பாதுகாவலரை கனடா திரும்ப அனுமதிக்குமாறு அவரது புதல்வி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது தந்தையின் இருப்பிடத்தை வெளிப்படுத்துமாறும் வியட்நாம், சீன அரசாங்கத்திடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

1989 Tiananmen சதுக்க மாணவர் போராட்டத்தின் இரத்தக்களரி விளைவை அழிக்க சீனாவின் முயற்சிகளுக்கு எதிராக குரல் எழுப்பிய Dong Guangping காணாமல் போயுள்ளதாக அவரது புதல்வி தெரிவித்துள்ளார்.

சீனாவில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 64 வயதான அவர், August மாதம் 24ஆம் திகதி வியட்நாமின் தலைநகரில் கைது செய்யப்பட்டார்.

தனது தந்தை கைது செய்யப்பட்ட பின்னர் அவரிடம் தொடர்புகள் எதுவும் இல்லை என கனடிய குடிமகளான அவரது புதல்வி கூறினார்.

Related posts

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருளின் விலை!

Lankathas Pathmanathan

மற்றொரு booster தடுப்பூசி பெறுவதை பல கனடியர்கள் தற்காலிகமாக நிறுத்தலாம்

Lankathas Pathmanathan

தேர்தலுக்குத் தயார்

Lankathas Pathmanathan

Leave a Comment