தேசியம்
செய்திகள்

முற்றுகை போராட்டத்தின் போது பிரதமருக்கு மரண அச்சுறுத்தல்!

இந்த வருட ஆரம்பத்தில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் கனடிய பிரதமருக்கு எதிரான மரண அச்சுறுத்தல் கனடிய எல்லை சேவைகள் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டது என தெரியவருகிறது.

தொடரும் அவசரகாலச் சட்ட விசாரணையில் கனடிய எல்லை சேவைகள் நிறுவன முன்னாள் தலைவர் John Ossowski புதன்கிழமை (16) சாட்சியமளித்தார்.

இந்த போராட்டங்களின் போது Trudeauவுக்கு எதிரான மரண அச்சுறுத்தல் CBSAக்கு அனுப்பப்பட்டது என விசாரணையில் Ossowski கூறினார்.

இந்த அச்சுறுத்தல்களை எல்லை சேவைகள் நிறுவன அதிகாரிகள் தீவிரமாக எடுத்துக் கொண்டனர் எனவும் அவர் தெரிவித்தார்.

போராட்டத்தில் கலந்து கொள்ள கனடாவுக்குள் நுழையும் எதிர்ப்பாளர்களை அதிகாரிகளால் தடுக்க முடியவில்லை எனவும் எல்லை சேவைகள் நிறுவன முன்னாள் தலைவர் தெரிவித்தார்.

January 17ஆம் திகதி முதல் Manitoba எல்லை மூலம் முதலாவது எதிர்ப்பாளர் கனடாவுக்குள் நுழைய ஆரம்பித்தார் என இந்த விசாரணையில் அவர் கூறினார்.

குற்றவாளிகள், புலம்பெயர்வோர் போராட்டத்தை காரணமாக்கி சட்டவிரோதமாக கனடாவுக்குள் நுழைவது குறித்து CBSA கவலை கொண்டதாகவும் Ossowski கூறினார்.

 

 

Related posts

Winnipegகின் இரண்டு நகரங்களில் பாடசாலைகள் இணையவழி கல்விக்கு மாற்றப்படுகின்றது

Gaya Raja

தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டில் CTC-யும், முன்னாள் தலைவரும் ஒரே கோட்டிலா?

Lankathas Pathmanathan

புதிய COVID மாறுபாடுகள் குறித்து விமான கழிவு நீரில் சோதனை

Lankathas Pathmanathan

Leave a Comment