தேசியம்
செய்திகள்

மீண்டும் வேலைக்குச் செல்லும் மசோதாவை நிறைவேற்றிய Ontario அரசாங்கம்

வெள்ளிக்கிழமை (04) ஆரம்பமாகும் கல்வி ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு முன்னதாக Ontario அரசாங்கம் மீண்டும் வேலைக்குச் செல்லும் மசோதாவை நிறைவேற்றியது.

கல்வித் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை சட்டவிரோதமாக்கும் சட்டத்தை வியாழக்கிழமை (03) Ontario அரசாங்கம் இயற்றியுள்ளது.

Bill 28 என்னும் இந்த மசோதா கடந்த திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்டு, வியாழன் பிற்பகல் நிறைவேற்றப்பட்டது.

கல்வித் தொழிலாளர்கள் மீது நான்கு வருட ஒப்பந்தத்தை இந்த சட்டமூலம் விதிக்கிறது

இருதரப்பும் ஒரு உடன்படிக்கைக்கு வராத நிலையில், கல்வி ஆதரவு ஊழியர்களுக்கும் Ontario இடையிலான பேச்சுக்கள் முறிந்தது.

இந்த நிலையில் நாளை திட்டமிட்டபடி கல்வி ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஆரம்பமாகும் என CUPE மீண்டும் அறிவித்துள்ளது.

Ontario கல்வி ஊழியர்களின் இந்த வேலை நிறுத்தம் மறு அறிவித்தல் வரை தொடரவுள்ளது.

இந்த நிலையில் Ontario மாகாணத்தின் பல கல்வி சபைகள் வெள்ளிக்கிழமை பாடசாலைகள் நடைபெறாது என அறிவித்துள்ளன.

திட்டமிட்ட வேலை நிறுத்தத்தின் விளைவாக தொடர்ந்து வரும் நாட்களில் அனைத்து சூழ்நிலைகளுக்கும் தயார்படுத்துமாறு பெற்றோர்களையும் பாதுகாவலர்ர்களையும் கல்விசபைகள் அறிவுறுத்துகிறது.

அதேவேளை பாடசாலைகளை முடிந்தவரை திறந்து வைத்திருக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு Ontario கல்வி அமைச்சு பாடசாலை வாரியங்களுக்கு அறிவுறுத்துகிறது.

Related posts

பதவி விலகாத David Johnstonனை விமர்சித்த NDP தலைவர்

Lankathas Pathmanathan

COVID தொற்றின் எண்ணிக்கை Ontarioவில் மீண்டும் அதிகரிக்கும்!

Lankathas Pathmanathan

Northwest பிரதேசங்களில் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் 300 கனடிய ஆயுதப் படையினர்!

Lankathas Pathmanathan

Leave a Comment