தேசியம்
செய்திகள்

கனடா மந்த நிலைக்குள் நுழையும் அபாயம் அதிகரிக்கிறது

கனடா மந்த நிலைக்குள் நுழையும் அபாயம் அதிகரித்து வருவதாக வியாழக்கிழமை (03) வெளியான மத்திய அரசின் இலையுதிர் கால பொருளாதார அறிக்கை எச்சரிக்கிறது.

கனடியப் பொருளாதாரத்தின் நிலை குறித்த இலையுதிர் கால பொருளாதார அறிக்கையை துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland வெளியிட்டார்.

மத்திய அரசின் இந்த பொருளாதார அறிக்கை, பற்றாக்குறை குறைந்து செல்வதை தெளிவாக்குகிறது.

2022-23ஆம் ஆண்டில் பற்றாக்குறை 36.4 பில்லியன் டொலராக இருக்கும் என நிதியமைச்சர் கூறினார்

கடந்த April மாதம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் பற்றாக்குறை 52.8 பில்லியன் டொலர்களாக எதிர்வு கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வரவு செலவு திட்டம் 2027-28ஆம் ஆண்டுக்குள் மீண்டும் சமநிலைக்கு திரும்பக்கூடும் என நிதியமைச்சர் கணித்துள்ளளார்.

2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர், Liberal அரசாங்கம் சமச்சீரான வரவு செலவு திட்டத்தை முன்னறிவிப்பது இதுவே முதல் முறையாகும்.

பணவீக்கத்தால் பயனடைந்தாலும் அரசாங்கம் புதிய செலவினங்களின் அடிப்படையில் எந்த சலுகைகளையும் வழங்கவில்லை எனவும் Freeland கூறினார்.

அதிக பணவீக்கத்துக்கு மத்தியில் கனேடியர்களுக்கு உதவ போதுமானதாக உள்ளடக்கங்களை இந்த பொருளாதார அறிக்கை கொண்டிருக்கவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றனர்.

தனது கட்சி இந்த திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக Conservative தலைவர் Pierre Poilievre கூறினார்.

இதற்கிடையில், கனேடியர்களுக்கு செலவுகளைக் குறைக்க பொருளாதார அறிக்கை போதுமானவற்றை செய்யவில்லை என NDP கூறியது.

விமர்சனங்கள் இருந்தபோதிலும், தனது கட்சி இந்த பொருளாதார அறிக்கையை ஏற்றுக்கொள்ள அரசாங்கத்துடன் வாக்களிக்கும் என NDP தலைவர் Jagmeet Singh உறுதிப்படுத்தினார்.

Related posts

Ontario மாகாண சபை தேர்தலில் தமிழர்கள் – அனிதா ஆனந்தராஜன்

B. C. உலங்கு வானூர்தி விபத்தில் 3 பேர் பலி

Lankathas Pathmanathan

பிரச்சாரத்தின் போது Liberal தலைவரை அச்சுறுத்தியதாக கூறப்படும் நபர் கைது!

Gaya Raja

Leave a Comment