December 12, 2024
தேசியம்
செய்திகள்

Ottawa போராட்டங்கள் குறித்த விசாரணை தொடர்கிறது

Ottawaவில் இந்த வருட ஆரம்பத்தில் நிகழ்ந்த போராட்டங்களின் போது Ontario முதல்வர் அரசியல் காரணங்களுக்காக, தனது பொறுப்பில் இருந்து விலகியிருந்ததாக விமர்சிக்கப்படுகிறது.

கடந்த குளிர்காலத்தின் ‘Freedom Convoy’ போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர Justin Trudeau அரசாங்கம் அவசர காலச் சட்டத்தை உபயோகித்தது குறித்த ஆணையத்தின் பொது விசாரணை செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்தது.

விரைவில் பதவி விலகும் Ottawa நகர முதல்வர் Jim Watson, இந்த ஆணையத்தில் இன்று சாட்சியம் அளித்தார்.

தனது சாட்சியத்தின் போது, நகரம் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகவும், போராட்டங்களை கட்டுப்படுத்த ஆரம்பத்திலேயே உதவி தேவைப்பட்டதாகவும் Watson ஒப்புக்கொண்டார்.

தனது பார்வையில் எதிர்ப்பு போராட்டத்திற்கு அரசாங்கத்தின் பதில் நடவடிக்கைகளும் அனைத்து மட்டங்களிலும் தோல்வியடைந்தது என்பதில் ஐயமில்லை என அவர் கூறினார்.

போராட்டங்களை கட்டுப்படுத்த Ottawa நகரம், மாகாண மத்திய அரசுகளுடன் எவ்வாறு தொடர்பை பேணியது என்பது குறித்தும் இந்த சாட்சியத்தின் போது புதிய தகவல்கள் வெளியாகின.

Related posts

சுகாதார ஊழியர்களுக்கு Quebec தடுப்பூசிகளை கட்டாயமாக்கலாம்!

Gaya Raja

உக்ரைனுக்கான ஆதரவை மீண்டும் வலியுறுத்தும் கனடா

Lankathas Pathmanathan

கனடா தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவிற்கு உக்ரேனிய ஜனாதிபதி நன்றி

Lankathas Pathmanathan

Leave a Comment