Saskatchewanனில் கடந்த மாதம் நடந்த கத்திக் குத்தின் போது நிகழ்ந்த 11 இறப்புகளுக்கும் Myles Sanderson பொறுப்பு என RCMP தெரிவி்த்தது.
இதில் இரண்டாவது சந்தேக நபராக முதலில் கருதப்பட்ட Damien Sanderson, அவரது சகோதரர் Myles Sandersonனினால் குத்திக் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக RCMP கூறியது.
Myles Sanderson அனைத்து கொலைகளையும் செய்துள்ளார் என RCMP கட்டளை அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்தார்.
September 4 நிகழ்ந்த கத்திக் குத்தில் 11 பேர் பலியானதுடன் 18 பேர் காயமடைந்தனர்.