2023இல் கனடா கடுமையானதும் தவிர்க்க முடியாததுமான மந்த நிலையை நோக்கிச் செல்கிறது என எச்சரிக்கப்படுகிறது.
அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் கனடா மந்த நிலைக்குள் நுழையும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கனடா மூன்று சதவீத சுருக்கத்தை எதிர்நோக்கும் எனவும் வேலையின்மை விகிதத்தில் ஐந்து சதவீதம் உயர்வு ஏற்படும் எனவும் கணிக்கப்படுகிறது.
புதிய கனடிய புள்ளியியல் தரவுகளின் படி, கனேடிய பொருளாதாரம் July மாதத்தில் 0.1 சதவிகிதம் மிதமான வளர்ச்சி கண்டுள்ளது.