Toronto பெரும்பாகத்தில் வியாழக்கிழமை (29) எரிபொருளின் விலை ஐந்து சதத்தினால் அதிகரிக்கிறது.
இந்த இலையுதிர் காலத்தில் எரிபொருளின் விலை தொடர்ந்தும் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.
வியாழன் நள்ளிரவு எரிபொருளின் விலை லிட்டருக்கு 153.9 சதமாக அதிகரிக்கும்.
October மாதத்தில் மெதுவாகவும், November மாதத்தில் சற்று வேகமாகவும் எரிபொருளின் விலை உயர்வைக் காணும் என கூறப்படுகிறது.
February மாதத்தின் பிற்பகுதியில் இருந்து தெற்கு Ontario முழுவதும் எரிபொருளின் விலைகள் அதிகரித்து வருகின்றன.