தேசியம்
செய்திகள்

உக்ரைனில் போரை தீவிரப்படுத்தும் ரஷ்யாவின் நகர்வை கண்டிகிறோம்: பிரதமர் Trudeau

உக்ரைனில் போரை தீவிரப்படுத்தும் ரஷ்ய அதிபரின் நகர்வை கண்டிப்பதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் பங்கேற்பதற்காக Trudeau இரண்டு நாள் பயணமாக New York சென்றுள்ளார்.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக உக்ரேனின் ஏழு மாத போராட்டம் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 77வது கூட்டத்தில் முக்கிய கருப்பொருளாக உள்ளது.

இந்த நிலையில் புதன்கிழமை (21) செய்தியாளர்களை சந்தித்த Trudeau, அணுசக்தி அச்சுறுத்தல்கள் உட்பட ரஷ்ய அதிபரின் போரை தீவிரப்படுத்தும் நகர்வுகளை கண்டித்தார்.

அதேவேளை உக்ரைனுக்கு எங்கள் ஆதரவை இரட்டிப்பாக்குவதற்கான நேரம் இது என Ottawaவில் செய்தியாளர்களிடம் பேசிய துணைப் பிரதமர் Chrystia Freeland கூறினார்.

போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைனுக்கு விரிவான இராணுவ உதவியை கனடா தொடர்ந்து வழங்கும் என பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார்.

Related posts

COVID பரவலில் இருந்து பாதுகாப்பு – கனடாவில் புதிய கட்டுப்பாடுகள்

Lankathas Pathmanathan

Calgary பேருந்து விபத்தில் ஆறு பேர் காயம்

Lankathas Pathmanathan

May மாதத்தில் சில்லறை விற்பனை 0.2 சதவீதம் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment