தேசியம்
செய்திகள்

மகாராணியின் இறுதி சடங்கில் பங்கேற்கும் கனேடிய குழுவினரின் விவரங்கள் வெளியானது

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதி சடங்கில் பங்கேற்கும் கனேடிய குழுவினரின் விவரங்களை பிரதமர் அலுவலகம் அறிவித்தது.

ஆளுநர் நாயகம் Mary Simon உடன், திங்கட்கிழமை மகாராணியின் இறுதி சடங்கிற்காக இங்கிலாந்து பயணமாகவுள்ளதாகவும் வியாழக்கிழமை (15) நாடாளுமன்றத்தில் பிரதமர் Justin Trudeau அறிவித்தார்.

தம்முடன் முன்னாள் பிரதமர்கள், ஆளுநர் நாயகர்கள் இந்த பயணத்தில் இணைவதாக பிரதமர் கூறினார்.

பல முதற்குடியினர் தலைவர்கள் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

பிரதமரின் துணைவி Sophie Grégoire Trudeau, ஆளுநர் நாயகத்தின் கணவர் Whit Fraser ஆகியோர் இறுதிச் சடங்கில் கலந்து கொள்கின்றனர்.

தவிரவும் முன்னாள் ஆளுநர் நாயகர்களான Michaëlle Jean, David Johnston, முன்னாள் பிரதமர்கள் Kim Campbell, Jean Chrétien, Paul Martin, Stephen Harper ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

இங்கிலாந்தில் நடைபெறும் இறுதி நிகழ்வில் நேரடியாக கலந்து கொள்ளாத முன்னாள் பிரதமர்கள் Brian Mulroney, Joe Clark ஆகியோர் திங்கட்கிழமை Ottawa நடைபெறும் தேசிய நினைவு நிகழ்வில் பங்கேற்பார்கள்.

NDP தலைவர் Jagmeet Singh இந்த நிகழ்வில் கலந்து கொள்வார் என கட்சி நிர்வாகி ஒருவர் உறுதி செய்துள்ளார்.

Related posts

கனடியர் கொலையில் இந்தியாவின் பங்கு குறித்த குற்றச்சாட்டுகளை இந்திய பிரதமரிடம் முன்வைத்த கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan

Liberal கட்சியை விட முன்னிலையில் உள்ள Conservative கட்சி

Lankathas Pathmanathan

British Colombia மாகாணத்தில் குழந்தை பராமரிப்பு கட்டணத்தில் பெரும் சேமிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment