தேசியம்
செய்திகள்

டிமென்ஷியாவுடன் வாழும் கனடியர்கள் 2050க்குள் மூன்று மடங்காக உயரும்

2030ஆம் ஆண்டுக்குள் சுமார் ஒரு மில்லியன் கனடியர்கள் டிமென்ஷியாவுடன் (dementia) வாழ்வார்கள் என Alzheimer சங்கம் கணித்துள்ளது.

இது 2020இல் டிமென்ஷியாவுடன் வாழ்வதாக பதிவான 597 ஆயிரம் கனடியர்களை விட 65 சதவீதத்திற்கும் அதிகமான அதிகரிப்பைக் குறிக்கிறது.

2020ஆம் ஆண்டு, கனடாவில் 124 ஆயிரம் புதிய கனடியர்கள் டிமென்ஷியாவுடன் வாழ்வதாக கண்டறியப்பட்டது.

2030ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் 187 ஆயிரமாக அதிகரிக்கும் என இந்த அறிக்கை கூறுகிறது.

கனடாவின் மக்கள் தொகை பெருகிய முறையில் வயதாகி வருவதால், ஒவ்வொரு ஆண்டும் டிமென்ஷியாவுடன் வாழ்பவர்களின் எண்ணிக்கை 2040களில் ஆண்டுதோறும் 250 ஆயிரத்திற்கும் அதிகமாக உயரும் என இந்த அறிக்கை கணித்துள்ளது.

2050ஆம் ஆண்டளவில், கனடாவில் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.7 மில்லியனுக்கும் அதிகமாக அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.

Related posts

Toronto காவல்துறை அதிகாரி மீது துப்பாக்கி பிரயோகம்!

Lankathas Pathmanathan

மீண்டும் திறக்கும் சில திட்டங்களை இடைநிறுத்தியது Ontario!

Gaya Raja

6.3 மில்லியன் பயணிகள் கனடாவில் தனிமைப்படுத்தல் விதிகளை பின்பற்றவில்லை

Lankathas Pathmanathan

Leave a Comment