Conservative கட்சியின் உறுப்பினர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் புதிய தலைவருக்கு வாக்களித்துள்ளனர்.
வாக்களிப்புக்கான காலக்கெடுவுக்கு ஒரு வாரம் உள்ள நிலையில் 350 ஆயிரத்துக்கும் அதிகமான அஞ்சல் வாக்குச் சீட்டுகள் மீளப் பெற்றுள்ளதாக கட்சி கூறுகிறது.
இந்த தேர்தலில் வாக்களிக்க 678 ஆயிரம் பேர் தகுதி பெற்றிருந்தனர்.
கட்சியின் தலைமைத் தேர்தலில் வாக்களிக்க இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில், வேட்பாளர்கள் தொடர்ந்தும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Conservative கட்சியின் புதிய தலைவர் September 10ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளார்.