தேசியம்
செய்திகள்

Trudeau அமைச்சரவையில் மாற்றம்

பிரதமர் Justin Trudeau புதன்கிழமை அமைச்சரவை மாற்றமொன்றை அறிவிக்கவுள்ளார் .

2021 தேர்தலை தொடர்ந்து நிகழும் முதலாவது அமைச்சரவை மாற்றம் இதுவாகும்.

சுகாதார சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இந்த அமைச்சரவை மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன

ஆனாலும் இந்த அறிவித்தலில் Liberal அரசாங்கத்தி்ன் முக்கிய அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை.

மாறாக இந்த மாற்றங்கள் சிறிய இலாக்காக்களில் கவனம் செலுத்தும் என தெரியவருகிறது.

அடுத்த வாரம் Vancouver நகரி்ல் நடைபெறவுள்ள Liberal அரசாங்கத்தின் அமைச்சரவை கூட்டத்திற்கு முன்னர் இந்த அமைச்சரவை மாற்றம் அறிவிக்கப்படவுள்ளது.

Vancouver அமைச்சரவை கூட்டத்தில் Trudeauவும் அவரது அமைச்சர்களும் அடுத்த நாடாளுமன்ற அமர்வுக்கான முன்னுரிமைகள் குறித்து விவாதிப்பதுடன் இலையுதிர் கால அமர்வுக்கான நிகழ்ச்சி நிரலை திட்டமிடுவார்கள்.

Trudeauவின் அமைச்சரவையில் தற்போது பிரதமரை தவிர 38 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

October மாதத்தில் வேலை வெற்றிடங்கள் 4.8 சதவீதம்

Lankathas Pathmanathan

Ontarioவில் அவசரகால நிலை அறிவிப்பு

Lankathas Pathmanathan

Toronto சர்வதேச திரைப்பட விழா வியாழன் ஆரம்பம்!

Lankathas Pathmanathan

Leave a Comment