December 12, 2024
தேசியம்
செய்திகள்

கனடிய அரசாங்கத்திக்கு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் $10.2 பில்லியன் மேலதிக வருமானம்

இந்த நிதியாண்டின் முதலாவது காலாண்டில் 10.2 பில்லியன் டொலர் மேலதிக வருமானத்தை கனடிய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

April முதல் June வரையிலான மேலதிக வருமானம் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 36.5 பில்லியன் டொலர் பற்றாக்குறையுடன் ஒப்பிடப்பட்டது.

நிதித் துறையின் மாதாந்த நிதி கண்காணிப்பு அறிக்கையில் இந்த தகவல் வெளியானது.

மத்திய அரசின் 2022-2023 நிதி முடிவுகள் தொற்றின் உச்சத்தில் இருந்து தொடர்ந்து மேம்பட்டு வருவதாகவும், தற்காலிக COVID செலவினங்கள் குறைந்து வருவதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.

மத்திய அரசுக்கு வருமானம் 18.7 பில்லியன் டொலர்கள் அல்லது 21 சதவீதம் உயர்ந்துள்ளது.

அதேநேரம் செலவுகள் 29 பில்லியன் டொலர்கள் அல்லது 25 சதவீதம் குறைந்துள்ளது.

Related posts

Toronto, Vancouver வீடு விற்பனை கடந்த ஆண்டை விட குறைகிறது

Lankathas Pathmanathan

மாகாணங்களுடன் சுகாதாரப் பாதுகாப்பு குறித்து விரைவில் சாதகமான பெறுபேறுகள்!

Lankathas Pathmanathan

தேர்தல்களை இலக்காகக் கொண்ட கனடாவுக்கு எதிரான நடவடிக்கை: CSIS எச்சரிக்கை!

Gaya Raja

Leave a Comment