தேசியம்
செய்திகள்

Ontarioவில் ஒரு வாரத்தில் 62 COVID மரணங்கள் பதிவு

Ontarioவில் கடந்த ஏழு நாட்களின் 62 COVID மரணங்கள் பதிவாகின.

இவ்வாறு மரணமடைந்தவர்களில் 24 பேர் நீண்ட கால பராமரிப்பு இல்லங்களில் வசித்தவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்தது.

Ontarioவில் கடந்த 30 நாட்களில் தொற்றுடன் தொடர்புடைய 193 இறப்புகள் பதிவாகியுள்ளதுடன் COVID தொற்றின் ஆரம்பத்தில் இருந்து இதுவரை 13,555 மரணங்கள் பதிவாகியுள்ளன.

அதேவேளை May மாதத்தின் நடுப்பகுதியின் பின்னர் Ontarioவில் மருத்துவமனையில் தொற்றின் காரணமாக அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிக எண்ணிக்கையில் உயர்ந்துள்ளது.

வியாழக்கிழமை (21) நிலவரப்படி 1,483 பேர் தொற்றின் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கை ஒரு வாரத்திற்கு முன்னர் 985 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது சிறுபான்மை Liberal அரசாங்கம்

Lankathas Pathmanathan

சீனாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கனேடியர்களும்  விடுதலை! 

Gaya Raja

Scarborough வடக்கு நகரசபை உறுப்பினர் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment