தேசியம்
செய்திகள்

Ontario அரசாங்கத்திற்கும் கல்வி தொழிற்சங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள்

Ontario மாகாண அரசாங்கத்திற்கும் கல்வி தொழிற்சங்கத்திற்கும் இடையில் ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளன.

55 ஆயிரம் கல்விப் பணியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கனடிய பொது ஊழியர் சங்கத்திற்கும் மாகாண அரசாங்கத்திற்கும் இடையிலான திட்டமிட்ட பேச்சுவார்த்தைகள் திங்கட்கிழமை (18) ஆரம்பமாகியது.

ஆசிரியர்கள் உட்பட பிற பாடசாலை தொழிலாளர்களுக்கான ஒப்பந்தங்கள் August மாத இறுதியில் காலாவதியாகும் முன்னர், நடைபெறும் முதலாவது பேச்சுவார்த்தை இதுவாகும்.

ஆரம்ப, இடைநிலை, கத்தோலிக்க, French பாடசாலை ஆசிரியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுடன் இந்த வாரம் மேலும் ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

மற்றொரு கனேடியர் இஸ்ரேலில் மரணம்!

Lankathas Pathmanathan

உக்ரைனுக்கு ஆதரவாக சேமிப்பு பத்திரங்கள் விற்பனையில் ….

Lankathas Pathmanathan

COVID தளர்வு நடவடிக்கைகளை பிற்போடும் Alberta!

Gaya Raja

Leave a Comment