தேசியம்
செய்திகள்

புதிய குளிர் காய்ச்சல் தடுப்பூசி ஒப்பந்தம்

குளிர் காய்ச்சல் தடுப்பூசிகளுக்கு GlaxoSmithKline நிறுவனத்துடன் கனடிய அரசாங்கம் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos வெள்ளிக்கிழமை (17) Quebec நகரில் இந்த ஒப்பந்தத்தை அறிவித்தார்.

Influenza எனப்படும் காய்ச்சல் தடுப்பூசிகளை தயாரித்து வழங்குவதற்கான நான்கு ஆண்டு ஒப்பந்தமாக இந்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது.

இதன் பின்னர் ஐந்து ஓராண்டு ஒப்பந்த நீடிப்பும் இதில் அடங்கியுள்ளது.

ஒரு தொற்று ஏற்பட்டால் 80 மில்லியன் குளிர் காய்ச்சல் தடுப்பூசியை கொள்வனவு செய்வதற்கான இணக்கம் இந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கியதாக அமைச்சர் Duclos தெரிவித்தார்.

பொது நிதியுதவியில் வழங்கப்படும் தடுப்பூசி திட்டங்களில் ஆண்டுதோறும் குறைந்தபட்சம் நான்கு மில்லியன் தடுப்பூசிகள் பயன்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

2001 ஆம் ஆண்டு முதல் குளிர் காய்ச்சல் தடுப்பூசிகளுக்காக GlaxoSmithKline நிறுவனத்துடன் கனடா ஒப்பந்தம் செய்துள்ளது.

2022 ஆம் ஆண்டிற்கான முதல் குளிர் காய்ச்சல் தடுப்பூசி விநியோகம் September, October மாதங்களில் திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கனேடிய கடவுச்சீட்டுகள்

கனேடிய சீக்கிய தலைவர் கொல்லப்பட்டதில் இந்தியாவின் பங்கு உள்ளதாக Trudeau குற்றச் சாட்டு

Lankathas Pathmanathan

Ontario, NDP தலைமை பதவிக்கு முதல் வேட்பாளர்!

Lankathas Pathmanathan

Leave a Comment