தேசியம்
செய்திகள்

2023ஆம் ஆண்டு வரை hybrid முறையில் நாடாளுமன்ற அமர்வுகள் தொடரும்

2023ஆம் ஆண்டு வரை hybrid முறையில் நாடாளுமன்ற அமர்வுகள் தொடர நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

அரசாங்க சபை தலைவர் முன்வைத்த பிரேரணை Liberal, NDP, பசுமை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது

வியாழக்கிழமை (23) முன்வைக்கப்பட்ட இந்தப் பிரேரணை 177க்கு 144 என்ற வாக்குகளின் எண்ணிக்கையில் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணையம் மூலம் நாடாளுமன்ற அமர்வுகளிலும் விவாதத்திலும் கலந்து கொள்ள hybrid அமர்வுகள் அனுமதிக்கின்றன.

COVID தொற்றின் ஆரம்பம் முதல் நடைமுறைக்கு வந்த hybrid நடைமுறையைத் தொடர்வதற்கு எதிராக Conservative கட்சியினர் வாதிட்டனர்.

ஆனாலும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நெகிழ்வுத்தன்மையை அனுமதிப்பது அவசியம் என Liberal கட்சி வலியுறுத்துகிறது.

அதேவேளை வியாழக்கிழமையுடன் கோடை காலத்திற்கான கனடிய நாடாளுமன்ற அமர்வுகள் நிறைவுக்கு வந்தன.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் September நடுப்பகுதியில் மீண்டும் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வார்கள்.

Related posts

ஐந்து மாகாணங்களுடன் சுகாதார நிதி ஒப்பந்தங்களை கையெழுத்திட்ட மத்திய அரசாங்கம்

Lankathas Pathmanathan

குழந்தைகளுக்கான காய்ச்சல் மருந்துகளை இறக்குமதி செய்யும் Health கனடா

Lankathas Pathmanathan

கனேடிய பொதுத் தேர்தலில் தமிழர்கள்: அனிதா ஆனந்த்

Gaya Raja

Leave a Comment