தேசியம்
செய்திகள்

Quebec நகர மசூதி கொலையாளி 25 ஆண்டுகளுக்குப் பின்னர் நன்னடத்தைப் பிணைக்கு விண்ணப்பிக்கலாம் என தீர்ப்பு

Quebec நகர மசூதியில் துப்பாக்கிச் சூடு நடத்திய கொலையாளி 25 ஆண்டுகளுக்குப் பின்னர் நன்னடத்தைப் பிணைக்கு விண்ணப்பிக்கலாம் என கனடாவின் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பு குறித்து கியூபெக் நகர மசூதி ஏமாற்றம் அடைந்துள்ளதாக வெள்ளிக்கிழமை (27) தெரிவித்தது.

கொலையாளி குறுகிய காலத்திற்குள் சுதந்திரமான மனிதராக இருப்பார் என பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த தீர்ப்பினால் Quebec நகர மசூதியில் கொல்லப்பட்டவர்களின் குழந்தைகள் தங்கள் தந்தையின் கொலையாளியைச் சந்திக்க நேரிடும் என அவர்கள் அஞ்சுகிறார்கள்.

2017ஆம் ஆண்டு Quebec நகர மசூதியில் தொழுகைக்குப் பின்னர் கொலையாளி ஆறு பேரை சுட்டுக் கொன்றார்.

இந்த சம்பவத்தில் மேலும் ஐவர் பலத்த காயமடைந்தனர்.

Related posts

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

சில plastic பொருட்களுக்கு அடுத்த 18 மாதங்களில் அரசாங்கம் தடை

Quebec அனுப்பப்பட்ட கனடிய ஆயுதப் படையினர்

Lankathas Pathmanathan

Leave a Comment