தேசியம்
செய்திகள்

Roxham வீதி எல்லையை மூடவேண்டும்: Quebec அரசாங்கம் வலியுறுத்தல்

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான  Roxham வீதி எல்லையை மூடுமாறு Quebec அரசாங்கம் கனடிய மத்திய அரசாங்கத்தை கோருகின்றது.

சட்டவிரோத குடியேற்றவாசிகளின் பெருமளவிலான வருகையை எதிர்த்து போராடுவதற்கு இந்த கோரிக்கையை  Quebec அரசாங்கம் முன்வைக்கிறது.

நாளாந்தம் குறைந்தது 100 பேர் இந்த தற்காலிக எல்லை கடவை ஊடாக கனடாவுக்குள் நுழைகின்றனர் என Quebec முதல்வர் François Legault கூறுகின்றார்.

இந்த அதிக எண்ணிக்கையிலானவர்களின்  வருகையை Quebec மாகாணம் எதிர்கொள்ள முடியாத நிலை தோன்றியுள்ளதாக Quebec குடிவரவு அமைச்சர் Jean Boulet தெரிவித்தார்.

Related posts

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கனடியத் தமிழர்கள் நன்கொடை

Lankathas Pathmanathan

Trudeauவின் பிரச்சார நிகழ்வில் கல் வீச்சு: கனடாவின் மக்கள் கட்சியின் Elgin Middlesex London தொகுதியின் தலைவர் பதவி விலக்கல்!

Gaya Raja

சரக்கு புகையிரத வண்டி தீப்பிடித்தது

Lankathas Pathmanathan

Leave a Comment