December 12, 2024
தேசியம்
செய்திகள்

கடந்த ஆண்டு வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்தது!

கடவுச் சீட்டுகளுக்கான  விண்ணப்பங்களில் எதிர்கொள்ளப்படும்  அதிகரிப்பு நீண்ட காத்திருப்பு காலத்தை உருவாகியுள்ளதாக Service கனடா கூறியுள்ளது.

மீண்டும் பயணம் மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள ஆர்வம், கடந்த ஆண்டில் வழங்கப்பட்ட கனேடிய கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை  மும்மடங்காக அதிகரித்துள்ளது.

பொது சுகாதார கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வெளிநாட்டு  பயணம் மீண்டும் ஆரம்பித்துள்ளதால்  நாடு முழுவதும் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதாக Service கனடா பேச்சாளர் தெரிவித்தார்.

April 1, 2020 முதல் March 31, 2021 வரையிலான காலப்பகுதியில் Service கனடா முந்நூற்று அறுபத்து மூவாயிரம்  கடவுச்சீட்டுகளை வழங்கியது.

இந்த எண்ணிக்கை  April 1, 2021 முதல்  March 31, 2022 வரை ஒரு மில்லியன், இருநூற்று எழுபத்து மூவாயிரமாக ஆக அதிகரித்தது.

Related posts

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 4ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

விடுமுறை கால சுகாதார ஆலோசனையை வெளியிட்ட தலைமை சுகாதார அதிகாரி

Lankathas Pathmanathan

கைத்துப்பாக்கிகளை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக தடை செய்யும் கனடா

Leave a Comment