தேசியம்
செய்திகள்

கனடா சிவில் உரிமை மீறல்களின் சின்னமாக மாறியுள்ளது என குற்றச்சாட்டு

கனடா சிவில் உரிமை மீறல்களின் சின்னமாக மாறியுள்ளது என இரண்டு ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.

அண்மைய COVID கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களை கையாண்ட விதம் குறித்து இரண்டு ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் Justin Trudeau மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

குரோஷியாவின் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் Mislav Kolakusic, ஜெர்மன் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் Christine Anderson ஆகியோர் இந்த விமர்சனத்தை முன்வைத்தனர்.

வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு அவசரகாலச் சட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் கனடிய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை Kolakusic கடுமையாக சாடினார்.

Trudeau எந்தவொரு ஜனநாயகத்திற்கும் அவமானம் என கூறிய Anderson, பிரதமரை தனது இருப்பைக் காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டார்.

நேற்று முன்தினம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பிரதமர் Trudeau உரையாற்றிய பின்னர் இந்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

மூன்றாவது அரசியல்வாதியான, ரோமானிய ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் Christian Terhes, Trudeau உரையாற்றிய நிகழ்வில் கலந்துகொள்ள மறுத்திருந்தார்.

இந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் COVID கட்டுப்பாடுகளுக்கும், தடுப்பூசி வழங்களுக்கும் எதிர்வான நிலைப்பாட்டைக் கொண்ட வலதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வாகன திருட்டு குற்றச்சாட்டில் தமிழர் உட்பட 8 பேர் கைது!

Lankathas Pathmanathan

மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கனேடிய கடவுச்சீட்டுகள்

 தங்கம் வென்ற கனடிய மகளிர்  Hockey அணி!

Gaya Raja

Leave a Comment