தேசியம்
செய்திகள்

Saskatchewan மாகாணம் 2026-27ஆம் ஆண்டுக்குள் சமநிலைக்குத் திருப்பும்: நிதி அமைச்சர்

Saskatchewan மாகாணம் 2022-23ஆம் நிதியாண்டிற்கு 463 மில்லியன் டொலர் பற்றாக்குறையை முன்னறிவித்தது.
மாகாண நிதி அமைச்சர் Donna Harpauer புதன்கிழமை (23) இந்த தகவலை வெளியிட்டார்.
இந்த கணிப்பு 2021-22ல் அறிவிக்கப்பட்ட 2.6 பில்லியன் டொலர் பற்றாக்குறை கணிப்பில் இருந்து பெரும் மாற்றமாகும்.

கடந்த ஆண்டில் 2022-23ற்கு அறிவிக்கப்பட்ட 1.7 பில்லியன் டொலர் பற்றாக்குறையை விட இது குறைவாகும்.

தொற்றில் இருந்து வெளியேறும் வலுவான பொருளாதார வளர்ச்சியையும் வேலை உருவாக்கத்தையும் Saskatchewan எதிர்கொள்வதாக கூறும் Harpauer, இதன் விளைவாக, மாகாணத்தின் நிதிக் கண்ணோட்டம் கணிசமாக மேம்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மாகாணத்தை 2026-27ஆம் ஆண்டுக்குள் சமநிலைக்குத் திருப்பும் திட்டத்தில் உறுதியாக இருப்பதாகவும் நிதியமைச்சர் கூறுகிறார்.

Related posts

Montreal நகரில் அவசரகால நிலை

Lankathas Pathmanathan

Pickering துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தமிழர் மரணம்

COVID பயண விதிகளை விலக்க பிரதமர் முடிவு

Lankathas Pathmanathan

Leave a Comment