தேசியம்
செய்திகள்

NDPயின் மாகாண சபை உறுப்பினர் கட்சியில் இருந்து விலத்தப்பட்டார்

Ontario மாகாண புதிய ஜனநாயக கட்சியில் இருந்து மாகாண சபை உறுப்பினர் Paul Miller விலத்தப்பட்டுள்ளார்.

NDP கட்சியின் தலைவி Andrea Horwath இந்த முடிவு எடுத்துள்ளார்.

Hamilton East-Stoney Creek மாகாண சபை உறுப்பினரை கட்சியில் இருந்து விலத்தியதற்க்கான காரணங்கள் குறித்து மேலதிக தகவலை தன்னால் வழங்க முடியாது என திங்களன்று Horwath செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதனை ஒரு எளிதான முடிவு அல்ல என கூறிய Horwath, ஆனால் தலைவர்கள் சில நேரங்களில் இது போன்ற கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

2022 தேர்தலில் NDPயின் வேட்பாளராக Miller போட்டியிட அனுமதிக்கப்பட மாட்டார் என தீர்மானித்ததாக கடந்த வாரம் Horwath ஒரு அறிக்கையில் கூறினார்.

தனக்கு எதிரான ஆதாரங்கள் புனையப்பட்டவை என மாகாண சபை உறுப்பினர் Miller கூறினார்.

Related posts

Ontario மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படும் இராணுவத்தினர்!

Gaya Raja

இலங்கை: சீரழிந்து வரும் பொருளாதாரம் – உள்நாட்டு அமைதியின்மை குறித்து கனடா கவலை

கனடிய சீக்கிய தலைவரின் முதலாவது ஆண்டு நினைவு

Lankathas Pathmanathan

Leave a Comment