தேசியம்
செய்திகள்

கனடியர்கள் தொடர்ந்து முகமூடி அணிய வேண்டியது அவசியம்

கனடியர்கள் தொடர்ந்து முகமூடி அணிய வேண்டியதன் அவசியத்தை கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி Dr. Theresa Tam வலியுறுத்தினார்.

மாகாணங்கள் பலவும் தங்கள் முகமூடி கட்டுப்பாடுகளை அதிகளவில் கைவிட்டாலும், முகமூடி அணிவது ஒரு சிறந்த பாதுகாப்பு என Tam கூறினார்.

Saskatchewan, Alberta, British Colombia, Manitoba ஆகிய மாகாணங்கள் முகமூடி கட்டுப்பாடுகளை ஏற்கனவே விலத்தியுள்ளன.

Ontario எதிர்வரும் திங்கட்கிழமை (21) அநேக இடங்களில் முகமூடிக் கட்டுப்பாடுகளை விலத்தவுள்ளது.

அதேவேளை April நடுப்பகுதிக்குள் முகமூடி கட்டுப்பாடுகளை விலத்தவுள்ளதாக Quebec அறிவித்துள்ளது.

தொற்று பாதிப்பின் குறைவு கட்டாய முகமூடிகளைத் தவிர்க்கும் முடிவை நியாயப்படுத்துவதாக மாகாணங்கள் மேற்கோள் காட்டியுள்ளன.

ஆனாலும் முகமூடி அணிவது சிறந்த யோசனை என Tam கூறினார்.

தொற்று இன்னும் பரிணாம வளர்ச்சியில் இருக்கும் நிச்சயமற்ற காலகட்டத்தில் நாங்கள் இருக்கிறோம், என தெரிவித்த Tam, தடுப்பூசிகளைப் பெறுவதும் முகமூடி அணிவது சிறந்த எதிர்ப்பு நடவடிக்கைகளாகும் என கூறினார்

Related posts

உகாண்டாவிற்கு 2 மில்லியன் COVID தடுப்பூசிகளை வழங்கிய கனடா!

Lankathas Pathmanathan

ஹமாஸ் தாக்குதலில் கனடியர் பலி

Lankathas Pathmanathan

COVID தொற்றின் புதிய அலையின் ஆரம்பத்தில் கனடா?

Lankathas Pathmanathan

Leave a Comment