தேசியம்
செய்திகள்

Conservative தலைவருக்கான போட்டியில் முன்னாள் Quebec முதல்வர்

முன்னாள் Quebec முதல்வர் Jean Charest  Conservative கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடுகிறார்.
63 வயதான Charest, இந்த முடிவை வியாழக்கிழமை (10) Calgaryயில் அறிவித்தார்.
மத்திய அரசியலில் இருந்து வெளியேறி 24 ஆண்டுகளுக்குப் பின்னர், Conservative கட்சியின் தலைவருக்கான தனது பிரச்சாரத்தை அவர் ஆரம்பித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான Pierre Poilievre, Leslyn Lewis ஆகியோர் இதுவரை தலைமை பதவிக்கு போட்டியிடுவதாக  அறிவித்துள்ளனர்

Brampton நகர முதல்வர் Patrick Brownனும் எதிர்வரும் வார விடுமுறையில் கட்சி தலைமைக்கான தனது பிரச்சாரத்தை அறிவிப்பார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

Conservative கட்சியின் புதிய தலைவர் September 10ஆம் திகதிக்குள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

Related posts

கனடிய செய்திகள் – October மாதம் 05ஆம் திகதி திங்கள்கிழமை

Lankathas Pathmanathan

உக்ரைனுக்கு மேலும் நான்கு யுத்த பீரங்கிகளை வழங்கும் கனடா

Lankathas Pathmanathan

லெபனானில் இருந்து கனடியர்களை வெளியேற்ற உதவும் நிலையில் படையினர்?

Lankathas Pathmanathan

Leave a Comment