September 30, 2026
தேசியம்
செய்திகள்

அனைத்து கட்டுப்பாடுகளையும் கைவிட Ontario முடிவு

Ontario மாகாணம் அனைத்து COVID கட்டுப்பாடுகளையும் கைவிட முடிவு செய்துள்ளது.

அனைத்து COVID கட்டுப்பாடுகளும் விரைவில் விலத்தப்படும் என புதன்கிழமை (09) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மாகாணத்தின் தலைமை மருத்துவர் உறுதிப்படுத்தினார்.

முகமூடி கட்டுப்பாடுகள்  இந்த மாதத்தின் பிற்பகுதியில் பெரும்பாலான உட்புறங்களில் நீக்கப்படும் என Dr. Kieran Moore அறிவித்தார் .
March 21 முதல், மாகாணம் முழுவதும் உள்ள பாடசாலைகள், உணவகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களில் முகமூடிகள் தேவையில்லை என  அறிவிக்கப்பட்டது.

April 27 வரை பொதுப் போக்குவரத்து, நீண்ட கால பராமரிப்பு இல்லங்கள் போன்ற இடங்களில் முகமூடி கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும்.

 தனிப்பட்ட நிறுவனங்களுக்கு இந்த கட்டுப்பாடுகளை தொடர்ந்தும் அமுலில் வைத்திருக்கும் அதிகாரம் தொடர்ந்து இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
 March 14 முதல், அனைத்து கட்டாய தடுப்பூசி கட்டுபாடுகளும் முடிவுக்கு வரும் எனவும்  அறிவிக்கப்பட்டது.
நாங்கள் இப்போது நீண்ட காலத்திற்கு தொற்றுடன் வாழவும் நிர்வகிக்கவும் கற்றுக் கொள்கிறோம் என Moore செய்தியாளர் சந்திப்பில் கூறினார்

Related posts

கனடாவில் COVID தொற்றால் 95 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்கள் பாதிப்பு!

Gaya Raja

6 மில்லியன் டொலர் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் இரண்டு தமிழர்கள் உட்பட மூவர் கைது

Lankathas Pathmanathan

G7 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் கனடிய பிரதமர்!

Gaya Raja

Leave a Comment