எரிபொருளின் சராசரி விலை வெள்ளிக்கிழமை (04) லிட்டர் ஒன்றுக்கு 2 டொலரை தாண்டியது.
இந்த வாரம் கனடியர்கள் எரிபொருளின் விலையில் வரலாறு காணாத அதிகரிப்பை எதிர்கொள்கின்றனர்
நாடளாவிய ரீதியில் வியாழக்கிழமை சராசரியாக ஒரு டொலர் 65 சதமாக விற்பனையான எரிபொருள் வெள்ளிக்கிழமை நண்பகல் நிலவரப்படி டொலர் 69 சதமாக அதிகரித்தது.
ஒரு வாரத்தில் நாடு முழுவதும் சராசரி எரிபொருளின் விலை 23 சதத்தினால் அதிகரிக்கின்றது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் எரிபொருளின் விலை லிட்டருக்கு சராசரியாக ஒரு டொலர் 82 சதமாக உயரும் என எதிர்வு கூறப்படுகிறது.
British Columbiaவில் வெள்ளிக்கிழமை எரிபொருளின் விலை சராசரியாக 2 டொலராக உயர்ந்துள்ளது.
Metro Vancouverரில் வெள்ளிக்கிழமை எரிபொருள் 2 டொலர் 9 சதமாக விற்பனையாகியது
இது Vancouver பகுதியில் இதுவரை பதிவு செய்யப்படாத அதிகபட்ச விலையாகும்.
Ontarioவில் எரிபொருளின் விலை இந்த வார இறுதியில் மற்றொரு பெரிய அதிகரிப்பை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை எரிபொருள் பதினொரு சதத்தால் அதிகரித்து லிட்டருக்கு ஒரு டொலர் 84 சதமாக விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டால், Ontarioவில் எரிபொருள் விலை ஒரு வாரத்திற்குள் லிட்டருக்கு 24 சதம் உயர்ந்திருக்கும்.