4,000 உக்ரேனியர்கள் கனடாவில் குடியேறுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கனடாவின் குடிவரவு அமைச்சர் Sean Fraser தெரிவித்தார்.
கனேடிய அரசாங்கம் உக்ரைனில் உள்ள குடியேற்ற விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளது.
உக்ரைனில் இருந்து குடியேறும் மக்களை எவ்வாறு வரவேற்பது என்பது குறித்து, உக்ரேனிய கனேடிய சமூகம், உக்ரேனிய கனேடிய காங்கிரஸ், உக்ரேனிய வணிக நிறுவனங்களின் உறுப்பினர்களிடம் பேசி வருவதாக குடிவரவு அமைச்சர் கூறினார்.
வரும் நாட்களில் இந்த நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான மேலதிக நடவடிக்கையை அறிவிக்கவுள்ளதாக அமைச்சர் Fraser கூறினார்.
பாதுகாப்பு கருதி கனடாவுக்கு வர விரும்பும் உக்ரேனியர்களுக்கான விசா தேவைகளை கைவிடுமாறு கனடிய அரசாங்கத்தை, NDP வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் ரஷ்ய அதிபர் Vladimir Putin அகதிகள் நெருக்கடியை ஒன்றை உருவாக்கியுள்ளார் என கனடிய பிரதமர் Justin Trudeau திங்கட்கிழமை (28) குற்றம் சாட்டினார்.