தேசியம்
செய்திகள்

சட்டவிரோத ஆக்கிரமிப்புகள், முற்றுகைகளை அனைத்து தரப்பினரும் கண்டிக்க வேண்டும்

சட்டவிரோத ஆக்கிரமிப்புகள், முற்றுகைகள் ஆகியவற்றைக் கண்டிக்க அனைத்து தரப்பினரையும் பிரதமர் Justin Trudeau அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர்களுடன் வியாழக்கிழமை மாலை பிரதமர் Trudeau ஆலோசனை கூட்டமொன்றை நடத்தினார்.

இதில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள், முற்றுகைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த முற்றுகைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது எவ்வளவு முக்கியம் என்பதை பிரதமர் எதிர்க்கட்சி தலைவர்களிடம் வலியுறுத்தினார்.

ஒவ்வொரு தரப்பினரும் இந்த சட்டவிரோத செயல்களை கண்டனம் செய்ய வேண்டும் எனவும் பிரதமர் இந்த சந்திப்பில் கூறினார்.

Trudeau, எதிர்க்கட்சித் தலைவரும் Conservative கட்சியின் இடைக்கால தலைவருமான Candice Bergen, Bloc Quebecois தலைவர் Yves-Francois Blanchet, NDP தலைவர் Jagmeet Singh ஆகியோருக்கு இடையே தொலை தொடர்பு சந்திப்பாக இந்த உரையாடல் நிகழ்ந்தது.

Related posts

Waterloo பல்கலைக்கழகத்தில் மூவர் கத்தியால் குத்தப்பட்டது ஒரு வெறுப்பு குற்றம்

Lankathas Pathmanathan

ஒலிம்பிக் போட்டியில் கனடா 24 பதக்கங்கள் வெற்றி!

Gaya Raja

Ontarioவில் இந்த ஆண்டு 250க்கும் மேற்பட்டவர்கள் விபத்துக்களில் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment