தேசியம்
செய்திகள்

முழுமையாக தடுப்பூசி பெற்றுக் கொள்ளுங்கள்: நோய் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு புதிய வழிகாட்டுதல்

COVID தொற்றால் முன்னர் பாதிக்கப்பட்டிருந்தாலும், முழுமையாக தடுப்பூசி பெற்றுக் கொள்ளுங்கள் என கனடிய நோய் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு வெள்ளிக்கிழமை (04) புதிய வழிகாட்டுதலை வெளியிட்டது.
இரண்டு தடுப்பூசிகள் கூட Omicron மாறுபாட்டிலிருந்து பாதுகாப்பை வழங்கவில்லை என தலைமை பொது சுகாதார அதிகாரி Dr. Theresa Tam தெரிவித்தார்.

தடுப்பூசி ஆணைகளை மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என கூறும்  அவர், தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான  வழிகளை அரசாங்கங்கள் கண்டுபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றார்.

புதன்கிழமை வரையிலான தரவுகளின் படி ஒவ்வொரு நாளும் 10,000க்கும் மேற்பட்டவர்கள் தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என Tam  கூறினார்.
18 வயதுக்கு மேற்பட்ட  கனேடியர்களில் 91 சதவீதத்திற்கும் அதிகமானோர் குறைந்தபட்சம் ஒரு COVID தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என கனடாவின் பொது சுகாதார அமைப்பின் சமீபத்திய தரவுகள் சுட்டிக்   காட்டுகிறது.
January 30 வரை, தகுதியான அனைத்து கனடியர்களில் 50 சதவீதம் பேர் booster தடுப்பூசியை பெற்றுள்ளனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களுக்கு விரைவில் ஆபத்து மதிப்பீட்டு கருவி அறிமுகம்: Theresa Tam

Gaya Raja

COVID காரணமாக மரணமடைந்தவர்கள் 92.8 சதவீதமானவர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்

Lankathas Pathmanathan

நாடளாவிய ரீதியில் 324 காட்டுத்தீ

Lankathas Pathmanathan

Leave a Comment