தடுப்பூசி போடாதவர்களுக்கு முன்மொழியப்பட்ட வரியை Quebec இரத்து செய்கிறது.
மாகாண முதல்வர் François Legault செவ்வாய்க்கிழமை (01) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
சர்ச்சைக்குரிய இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு வலுத்ததை அடுத்து, வரி விதிக்கும் திட்டங்களில் இருந்து Quebec அரசாங்கம் பின் வாங்கியுள்ளது.
இந்த சட்டம் தேசிய சட்டமன்றத்தை பிளவுபடுத்தும் என்பதை உணர்ந்து கொண்டதாக முதல்வர் கூறினார்.
Legault அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு ஏற்கனவே பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
அதேவேளை கூடுதல் பொது சுகாதார நடவடிக்கைகள் இந்த மாத இறுதியில் நீக்கப்படும் என இன்று Legault கூறினார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால், மேலும் பொது சுகாதார கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான சிறந்த நிலையில் இருப்பதாக முதல்வர் தெரிவித்தார் .