தேசியம்
செய்திகள்

மற்றொரு முன்னாள் வதிவிடப் பாடசாலைக்கு அருகில் கல்லறைகள் கண்டுபிடிப்பு

British Colombia மாகாணத்தில் மற்றொரு முன்னாள் வதிவிடப் பாடசாலைக்கு அருகில் நிலக் குறிப்புகள் இல்லாத 93 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தரையில் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய புவி இயற்பியல் ஆய்வு, அங்கு சாத்தியமான கல்லறைகள் இருப்பதை வெளிப்படுத்தியதாக Williams Lake First Nation செவ்வாய்க்கிழமை (25) அறிவித்தது.

பல தசாப்தங்களாக St. Joseph’s Missionனில் புறக்கணிப்பும்  துஷ்பிரயோகமும்  நிகழ்ந்ததாக Williams Lake First Nation தலைவர் Willie Sellars செவ்வாயன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

இந்த கண்டுபிடிப்புகள் பூர்வாங்கமாக கருதப்படுகின்றன.

மேலும் ஆய்வுகள் தொடர்வதால் கல்லறைகள் குறித்த மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Related posts

குரங்கம்மை தொற்றை பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கும் திட்டம் இல்லை: Dr. Theresa Tam

Lankathas Pathmanathan

பணிக்குத் திரும்பிய LCBO ஊழியர்கள்

Lankathas Pathmanathan

காவல்துறை அதிகாரி மரணமடைந்த விபத்தில் போதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டு பதிவு

Lankathas Pathmanathan

Leave a Comment