தேசியம்
செய்திகள்

கனடாவில் ஒரு பெரிய அரசியல் கட்சியை தலைமை தாங்கிய முதல் பெண் மரணம்

NDP கட்சியின் முன்னாள் தலைவி Alexa McDonough சனிக்கிழமை (15) தனது 77ஆவது வயதில் காலமானார்.

கனடாவில் ஒரு பெரிய அரசியல் கட்சியை தலைமை தாங்கிய முதல் பெண் இவராவார்.

Alzheimer நோயுடன் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் McDonough இறந்ததை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.

அவர் 1980இல் Nova Scotia மாகாணத்தின் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1995 இல் கனடிய NDPஇன் தலைவரான அவர் 2002 வரை கட்சியின் உயர் பதவியில் பணியாற்றினார்.

McDonough சமூக நீதிக்கான தனது அர்ப்பணிப்புக்காக நினைவு கூரப்படுகிறார்.

அவரது மரணம் கனடாவிற்கு ஒரு பெரும் இழப்பு என பிரதமர் Justin Trudeau தெரிவித்துள்ளார்.

மாகாண, மத்திய அரசியலில் ஒரு வரலாற்று நபராக McDonough இருப்பார் என Nova Scotia முதல்வர் Tim Houston ஒரு அறிக்கையில் அஞ்சலி செலுத்தினார்.

இன்று கனடாவிற்கு சோகமான நாள் என அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் NDP தலைவர் இல்லை Jagmeet Singh குறிப்பிட்டார்.

தான் சந்தித்த தலைவர்களில் அழகு, கம்பீரம், திறமை, மதிநுட்பம் அனைத்தும் ஒருங்கிணைந்து, ஆண் தலைவர்களுக்கு இணையாக செயற்பட்ட சிறந்த தலைவர் Mcdonough என தமிழரான முன்னாள் Ontario மாகாண NDP வேட்பாளர் ஜானகி பாலகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Related posts

சுகாதார பராமரிப்பு நிதி ஒப்பந்தங்களை Conservative அரசாங்கம் ஆதரிக்கும்: Poilievre

Lankathas Pathmanathan

800 காட்டுத்தீ தொடர்ந்து கட்டுக்குள் இல்லாத நிலை தொடர்கிறது!

Lankathas Pathmanathan

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரின் மரணம் குறித்து கனடிய அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி

Lankathas Pathmanathan

Leave a Comment