தேசியம்
செய்திகள்

2020ஆம் ஆண்டை விட, Omicron திரிபின் முதல் 40 நாட்களில் அதிக தொற்றுக்கள் பதிவு

2020ஆம் ஆண்டை விட, Omicron திரிபு அறிவிக்கப்பட்ட முதல் 40 நாட்களில் அதிக COVID தொற்றுக்களை  கனடா பதிவு செய்துள்ளது.

November 29, 2021 அன்று Omicronஇன் முதலாவது தொற்று  கனடாவில் பதிவானது.

அன்றில் இருந்து  40 நாட்களில் 777 ஆயிரத்து 609 உறுதிப்படுத்தப்பட்ட புதிய தொற்றுகள் கனடாவில் பதிவாகின.

இதற்கு நேர்மாறாக, January 25, 2020இல் முதலாவது COVID தொற்றாளர் ஆவணப்படுத்தப்பட்ட பின்னர் , அதே அளவிலான தொற்றுக்களின் எண்ணிக்கையை கடப்பதற்கு 370 நாட்களுக்கு மேல் ஆனது.

கடந்த ஆண்டு குளிர்காலத்திலும் வசந்த காலத்திலும் இரண்டாவது, மூன்றாவது அலைகளின் உச்சத்தை விட இப்போது செயலில் உள்ள தொற்றுகளின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.

தொற்றுகளின் எண்ணிக்கை மருத்துவமனைகளிலும் தீவிர சிகிச்சை பிரிவுகளிலும் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.

குறிப்பாக Ontario, Quebec,  New Brunswick ஆகிய மாகாணங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.

Related posts

குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் Ontario மாகாண சபை உறுப்பினர்

Lankathas Pathmanathan

Torontoவில் அதிகரிக்கும் வன்முறை குறித்து Olivia Chow கவலை

Lankathas Pathmanathan

Manitoba விபத்தில் இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள்

Lankathas Pathmanathan

Leave a Comment