கனடிய அரசாங்கத்தின் COVID பதில் நடவடிக்கை அறிவித்தல் ஒன்றை பிரதமர் Justin Trudeau புதன்கிழமை (05) வெளியிடவுள்ளார்.
கடந்த சில வாரங்களாக தொற்றின் எண்ணிக்கை நாட்டின் பல பகுதிகளில் புதிய உச்சத்தை எட்டியுள்ளன,
இது Omicron மாறுபாட்டின் விரைவான பரவலால் தூண்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விடுமுறை காலத்தில் பின்னர் பிரதமர் Trudeau தனது முதலாவது செய்தியாளர் சந்திப்பில் புதன்கிழமை கலந்து கொள்ளவுள்ளார்.
இந்த சந்திப்பில் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland, சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos, பொது சுகாதார தலைமை அதிகாரி Dr. Theresa Tam, துணை பொது சுகாதார தலைமை அதிகாரி Dr. Howard Njoo ஆகியோரும் பங்கேற்பார்கள்.