வியாழக்கிழமை (30) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Ontarioவின் தலைமை மருத்துவ அதிகாரி Kieran Moore இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
பொதுமக்களுக்கு புதிய சோதனை வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்திய அவர் COVID தனிமைப்படுத்தல் காலத்தை சில தனிநபர்களுக்காக குறைப்பதாக கூறினார்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், தடுப்பூசி போடப்பட்ட நபர்களுக்கு தேவையான தனிமைப்படுத்தல் காலத்தை பத்து நாட்களில் இருந்து ஐந்து நாட்களாக மாகாணம் குறைக்கிறது.
தொடர்ந்து கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என Moore கூறினார்.
அதிக ஆபத்துள்ள சுகாதாரப் பாதுகாப்பு இடங்களில் பணிபுரியும் அல்லது வசிக்கும் நபர்கள் 10 நாட்களுக்கு வேலைக்குச் செல்லக் கூடாது எனவும் இன்று அறிவிக்கப்பட்டது.
இலேசான தொற்றின் அறிகுறிகளைக் கொண்ட பொதுமக்கள் இப்போது பரிசோதனையை நாட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.