தேசியம்
செய்திகள்

சுகாதாரப் பணியாளர்கள் COVID தொற்றுடன் சேவையாற்ற Quebecகில் அனுமதி

COVID தொற்றுடன் சில சுகாதாரப் பணியாளர்கள் சேவையாற்ற அனுமதிக்கப்படுவார்கள் என  Quebec a அரசாங்கம் அறிவித்தது.
சுகாதார அமைச்சர் Christian Dubé செவ்வாய்க்கிழமை (28) இந்த தகவலை வெளியிட்டார்.

Omicron திரிபினால் தூண்டப்பட்ட தொற்றுகளின் அதிகரிப்பு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவற்றை மாகாணம் எதிர்கொண்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.

சுகாதார வலையமைப்பு  முழுமையாக செயலிழக்கும் நிலையை தவிர்க்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தொற்று காரணமாக கடந்த வாரம் 4,000 சுகாதாரப் பணியாளர்கள் பணிக்கு வரவில்லை எனவும், செவ்வாய்க்கிழமை அந்த எண்ணிக்கை 7,000 ஆக உயர்ந்துள்ளது எனவும் Dubé கூறினார்.
பணிக்கு வராத சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கை அடுத்த சில நாட்களில் 10,000ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் சுகாதார அமைச்சர் Dubé கூறினார்.

Related posts

கனடிய செய்திகள் – October மாதம் 29ஆம் திகதி வியாழக்கிழமை

Lankathas Pathmanathan

தமிழர் போட்டியிடும் இடைத் தேர்தல் வாக்களிப்பு வியாழக்கிழமை

Lankathas Pathmanathan

New Brunswick அவசர சிகிச்சை பிரிவில் காத்திருந்த நோயாளி மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment