நாடளாவிய ரீதியில் வியாழக்கிழமை (16) மீண்டும் COVID தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து பதிவாகியுள்ளது.
வியாழக்கிழமை மாத்திரம் 7 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுகள் கனடாவில் பதிவானது.
Quebec மாகாணம் தொடர்ந்து கனடாவில் அதிக எண்ணிக்கையில் நாளந்த தொற்றுக்களை பதிவு செய்கிறது. வியாழக்கிழமை 2,736 புதிய தொற்றுகளையும் ஐந்து மரணங்களையும் Quebec பதிவு செய்தது. வியாழக்கிழமை பதிவான தொற்றுகளில் 1,591 பேர் முழுமையான தடுப்பூசி பெற்றவர்கள் என தரவுகள் தெரிவிக்கின்றன. தற்போதுள்ள நிலையில், ஐந்து வயதிற்கு மேற்பட்டவர்களில் 81 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர். 88 சதவீதம் பேர் குறைந்த பட்சம் ஒரு தடுப்பூசி பெற்றுள்ளனர். ஆறு சதவீதம் பேர் தங்கள் booster ஊசியை பெற்றுள்ளனர்.
Quebec போலவே Ontario மாகாணத்திலும் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை சுகாதார அதிகாரிகள் Ontarioவில் 2,421 தொற்றுகளையும், ஒன்பது நோய் தொடர்பான இறப்புகளையும் அறிவித்தனர். Ontarioவில் நாளாந்தம் பதிவாகும் தொற்றின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை 1,429 தொற்றுகளும் புதன்கிழமை 1,808 தொற்றுகளும் Ontarioவில் பதிவாகியுள்ளன. மாகாணத்தின் ஏழு நாள் தொற்றின் சராசரி இப்போது சுமார் 1,674 ஆக உள்ளது. இது முந்தைய வாரத்தில் 1,055 ஆக இருந்தது. Ontarioவில் 12 வயதிற்கு மேற்பட்டவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் குறைந்தது ஒரு தடுப்பூசியை பெற்றுள்ளனர். கிட்டத்தட்ட 88 சதவீதம் பேர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.
British Columbiaவில் 753 தொற்றுகளும் மூன்று மரணங்களும் வியாழக்கிழமை பதிவானது.
Nova Scotia 287 புதிய தொற்றுக்களை பதிவு செய்தது.
Manitobaவில் வியாழக்கிழமை 218 தொற்றுகளும் இரண்டு மரணங்களும் பதிவாகின.
New Brunswick மாகாணத்தில் 177 புதிய தொற்றுகள் பதிவு செய்யப்பட்டன.