தேசியம்
செய்திகள்

ஐயாயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள் ஒரு நாளில் பதிவு

கனடாவின் புதன்கிழமை (15) ஐயாயிரத்துக்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகின.

மொத்தம் 5,807 தொற்றுக்கள் புதன்கிழமை கனடாவில் பதிவாகின.

மீண்டும் Quebec மாகாணம் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களை பதிவு செய்தது.

Quebec சுகாதார அதிகாரிகள் 2,386 தொற்றுகளையும் நான்கு மரணங்களையும் அறிவித்தனர்.

Ontario மாகாணத்திலும் தொடர்ந்து தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

1,808 தொற்றுகளையும் ஒன்பது மரணங்களையும் Ontario சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர்.

British Columbiaவில் 584 தொற்றுகளும் ஏழு மரணங்களும் அறிவிக்கப்பட்டது.

Albertaவில் 456 தொற்றுகளும் மூன்று   மரணங்களும்  அறிவிக்கப்பட்டது.

Manitobaவில் 206 தொற்றுகளும் இரண்டு மரணங்களும் அறிவிக்கப்பட்டது.

Nova Scotiaவில் 178 தொற்றுகள் பதிவாகின.

New Brunswickகில் 160 தொற்றுகள் பதிவாகின.

ஏனைய மாகாணங்களிலும் பிரதேசங்களிலும் தலா 100க்கும் குறைவான தொற்றுகளை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர்.

Related posts

தகுதி நீக்கம் செய்யப்பட்ட மற்றொரு Conservative வேட்பாளர்!

Lankathas Pathmanathan

ஆப்கானிஸ்தானில் இருந்து மேலும் 43 கனேடியர்கள் வெளியேறினர்!

Gaya Raja

அதிக அளவில் maple syrup உற்பத்தி

Lankathas Pathmanathan

Leave a Comment