Beijing குளிர்கால Olympics போட்டிகளின் இராஜதந்திர புறக்கணிப்பில் கனடா இணைகிறது.
2022 Olympic, Paralympic போட்டிகளை இராஜதந்திர ரீதியில் புறக்கணிப்பதாக புதன்கிழமை (08) நடந்த செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் Justin Trudeau அறிவித்தார்.
இந்த முடிவின் மூலம், கனடிய அரசாங்க அதிகாரிகள் Beijing குளிர்கால போட்டிகளில் கலந்து கொள்ள மாட்டார்கள் என பிரதமர் கூறினார்.
இந்த அறிவித்தலின் போது பிரதமருடன், வெளியுறவு அமைச்சர் Melanie Joly, விளையாட்டுதுறை அமைச்சர் Pascale St-Onge ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கனடிய விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து போட்டியில் பங்கேற்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.
ஆனாலும் பல முன்னாள் இராஜதந்திரிகளும் சர்வதேச பாதுகாப்பு ஆய்வாளர்களும் கனடா இந்த Olympics போட்டிகளை முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளனர்.
விளையாட்டு வீரர்களை அரசியல் சர்ச்சையிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என அமைச்சர் Joly வலியுறுத்தினார்.